Wednesday, 19 February 2025

இன்றைய ராசிபலன் - 19.02.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எந்த பதட்டமும் இருக்காது. சுபமான நாளாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். தடைப்பட்ட திருமணம் காதுகுத்து இதுபோல விசேஷங்களுக்கு தேதி குறிக்கலாம். நல்லதே நடக்கும். வேலைகளும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலோடு திறமையாக செயல்படுவீர்கள். மனபயம் ஒரு துளி கூட இருக்காது. யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று இந்த நாள் ரொம்பவும் நல்லபடியாக நகர்ந்து செல்லும். பேச்சு திறமை வெளிப்படும். கம்பீரமான இந்த நாளை தந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லி விடுங்கள்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எந்த சங்கடமும் இருக்காது. வாழ்க்கை ரொம்பவும் சுகமாக நகர்ந்து செல்லும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல வரவேற்பு, நல்ல மரியாதை என்று சென்ற இடமெல்லாம் இடமெல்லாம் உங்களுக்கு உபச்சாரம் தான். உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். பணமும் கொஞ்சம் செலவாகும். சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, கடமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் இந்த நாளில் பிரச்சனை இல்லை.

கடகம்


கடகம் ராசி காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கி நல்ல சுறுசுறுப்பு உண்டாகும். திறமையாக பேசுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். யாரேனும் உங்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை பேசினால் அவர்களை வெட்டி விடவும், உங்களுக்கு தெரியும். நல்லவர்களை கூடவே வைத்துக் கொள்ளவும் உங்களுக்கு தெரியும். இந்த நாள் நல்லதே நடக்கும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கப் போகிறது. தேவையற்ற டென்ஷன் தானாக விளக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணம் கையை வந்து சேரும். சேமிப்புக்கு உண்டான வழியையும் துவங்கி விடுவீர்கள். நல்லதே நடக்கும் நாள் இது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வியாபாரத்தில் இருந்த நஷ்டம் லாபமாக மாறும். வேலையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடையும். சம்பள உயர்வும் கிடைக்கும் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.



துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உடன் வேலை செய்பவர்களின் ஆதரவால், உங்களுக்கு நன்மை நடக்கும். நண்பர்கள் உறவுகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்பார்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வீடு தேடி நல்ல பெயர் புகழ் அந்தஸ்து வரும். என்றோ செய்த நல்லதுக்கு, அங்கீகாரம் உங்களுக்கு இன்று கிடைக்கும். யார் செய்த நல்லதும் வீண் போகாது. நிச்சயம் அதற்கான பலாபலன்களை அனுபவித்தே ஆக வேண்டும். நல்லது செய்தால் நல்லது, தீமை செய்தால் தீமை நடக்கும் என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள். இறைவனின் மீது நம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவும் இந்த நாள் அமையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனை இருக்கும். அடுத்தவர்களின் மீது சந்தேகம் இருக்கும். யாரையும் நம்ப மாட்டீர்கள். ஒரு முடிவை தெளிவாக எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். குழப்பம் நிறைந்த இந்த நாளில் இறைவழிபாடு செய்வது நல்லது. எந்த புது முடிவையும் எடுக்க வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எந்த ஒரு வேலையிலும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் உங்கள் முகத்தை பார்க்கும் போதே அடுத்தவர்களால் எந்த வார்த்தையும் பேச முடியாது. நீங்கள் ஒரு திறமைசாலி என்பது புரிந்துவிடும். அந்த அளவுக்கு உற்சாகம், முகம் பொலிவோடு, மனதில் தெளிவு இருக்கும். ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இன்று உங்களுக்கு செயல்பட போகிறது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் ரொம்ப ரொம்ப பொறுமையாக இருப்பீர்கள். அடிக்கடி முன்கோபம் வரக்கூடிய உங்களுக்கு, இன்று கோபமே வராது. அதனால் எல்லோரும் தப்பித்தார்கள். சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். தேவையற்ற பழிகளை சுமக்க கூடிய சூழ்நிலை உங்களுக்கு வரலாம். ஜாக்கிரதையாக இருங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக முடியும். குடும்ப உறவுகளை மிஸ் பண்ணக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி வேலை, தொழில் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நல்லபடியாக நடந்து, உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை மேலோங்கும்.
SHARE