Tuesday, 18 February 2025

இன்றைய ராசிபலன் - 18.02.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் நினைத்த நல்ல காரியம் நடக்கும். வீட்டில் சுப காரியம் பேச்சுக்கள் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் கஷ்டத்திற்கு இன்று ஒரு விடிவுகாலம் பிறக்கும். நீண்ட நாள் முயற்சிகள் இன்று வெற்றியைத் தரும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த நஷ்டங்கள் லாபமாக மாறும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனமாக இருக்கவும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு பெரிய இடத்தில் உங்களுக்கான மரியாதை கிடைக்கும். நீங்க நாலு பேர் பாராட்டத்தக்க வகையில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். அவார்டுக்கு உங்களுடைய பெயர் நாம் நாமினேஷன் ஆகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உங்களுக்கான முதல் பரிசு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இல்லாத நஷ்டத்தில் நீங்களே போய் சிக்கிக் கொள்ளக் கூடாது. குறிப்பாக வியாபாரத்தில் முதலீட்டில் கவனம் தேவை. அகல கால் வைக்க கூடாது. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது. உஷாராக இருக்க வேண்டும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகத்தில் அதிக ஆர்வத்தை காட்டுவீர்கள். வேண்டுதல் நிறைவேறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய பிரார்த்தனையை கோவிலுக்கு சென்று நல்லபடியாக நிறைவு செய்து வைப்பீர்கள். குடும்ப ஒற்றுமையும் அதிகரிக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் விலகக்கூடிய நாள். நல்லது தானாக தேடி வரக்கூடிய நாள். எதிரிகள் விலகுவார்கள். நண்பர்கள் உங்களோடு இருப்பார்கள். கடன் சுமை குறையும். வியாபாரத்தில் இருந்து வந்து தடைகள் விலகும். செய்யும் வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். நல்லது நடக்கும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உங்களுக்கான வேலையை நல்லபடியாக கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களையும் ஊக்குவித்து அவர்களையும் வாழ்க்கையில் உயர்த்தி, அழகு பார்ப்பீர்கள். சந்தோஷத்திலேயே மிகப் பெரிய சந்தோஷம், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான். அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை இன்று உங்களுக்கு அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்களோடு அதிக நேரம் செலவு செய்தீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இடமாற்றம், உங்களுக்கு தேவையான பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உங்கள் கையை வந்து சேரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாள் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த கோவிலை பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். கடவுள் ரூபத்தில் மனிதரே வந்து உதவி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. எதிர்பாராத அதிசயம் ஆச்சரியங்கள் இன்று உங்களுக்கு நடக்கும். எல்லாம் நன்மைக்கே நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பிர்கள். எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், உங்களுக்கான நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளோடு மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வம்பு வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத பணியை இன்று கையில் எடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து முடியும். இறையருள் கிடைக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். மனது ஒரு குழப்ப நிலையில் இருக்கும். பிரச்சனை என்று பார்த்தால் பெருசாக இல்லை. ஈகோ, தலைக்கனம். வாழ்க்கை இவ்வளவு சிறியது. இதில் கசக்கிப்பிழிய ஒன்றுமே இல்லை. விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இன்றைக்கான சந்தோஷம் உங்களிடம் நிலைத்திருக்கும். போட்டி போடாதீங்க. விட்டுக் கொடுத்து செல்லுங்கள் அவ்வளவுதான்.
SHARE