Monday, 17 February 2025

இன்றைய ராசிபலன் - 17.02.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற வீண் விரைய செலவுகளும் நஷ்டங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வார முதல் நாளே மேனேஜரிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் வாரா கடன் வசூல் ஆகும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். வேலையில் முழு கவனம் இருக்காது. அடுத்தவர்கள் பற்றிய சிந்தனை உங்கள் வேலையை கெடுத்து விடும். ஆகவே மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். எந்த சூழ்நிலையிலும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் மட்டும் சின்ன சின்ன வாக்குவாதம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும். கமிஷன் தொழிலில் எதிர்பாராத லாபத்தின் மூலம் மனதிருப்தியை அடைவீர்கள். சேமிப்பு உயரும். வீட்டில் பெண் பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன்கள் குறையும். கடன் சுமை குறையும். வங்கியில் இருக்கும் நகைகளை மீட்பததற்கும் நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுப காரியங்கள் விலகும் நல்லது நடக்கும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். நாளை என்ற வார்த்தை உங்கள் வாயிலிருந்து வராது. இன்றைக்கான வேலையை இன்றே செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள். நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். பெண்கள் குறிப்பாக சோம்பேறித்தனம் கூடாது. உங்களுக்கான வேலையை முன்கூட்டியே முடிப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் கூடுதல் சுறுசுறுப்பு தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று விழிப்புணர்ச்சியோடு இருப்பீர்கள். யாரிடமும் ஏமாற மாட்டீர்கள். இதுநாள்வரை ஏமாந்தவர்களிடமிருந்தும் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள். யார் நல்லவர் கெட்டவர் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய நாள் இது. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். கெட்ட மனிதர்களின் சவகாசம் உடையும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் கை நிறைய கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. மனநிறைவான நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீடு வேலை இவைகளை சமாளிப்பதில் பிரச்சனைகள் இருக்கும். இன்றைய நாள் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். ஜாக்கிரதையாக இருக்கவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் உடனடியாக வெற்றியை கொடுக்காது. வேலையில் டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் இருக்கும். வாழ்க்கைத் துணையே அனுசரித்து சென்றால் பிரச்சனை இல்லை. அதிகம் வாய் பேசக்கூடாது. முன்கோபத்தை முழுமையாக குறைக்க வேண்டும். மனதை அமைதிப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
SHARE