மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலையான நாளாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்காது. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது, ஏமாற்றமும் இருக்கத்தான் செய்யும். ஆகவே தோல்விகளை கண்டு துவண்டு போகாமல், வரும் கஷ்டங்களை எதிர்த்துக்கொண்டு துணிச்சலுடன் இந்த நாளை நடத்திச் செல்ல வேண்டும். இறை நம்பிக்கையுடன் இந்த நாளை துவங்குங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். புதிய முதலீட்டால் நல்ல லாபத்தை எடுக்கலாம். சொந்த பந்தங்களோடு நல்ல ஒற்றுமை உண்டாகும். மனநிறைவோடு நல்ல தூக்கம் கிடைக்கும் நாளாகவும் அமையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நபர்களின் அறிமுகம் சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தேவையற்ற டென்ஷன் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரி தொல்லை நீங்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் நிறைந்த நாளாகவும் அமையும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதட்டம் இருக்கும். தேவையற்ற மன பயத்தால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்கள். வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. தாழ்வு மனப்பான்மை வேண்டாம். உங்களாலும் எல்லாம் முடியும் என்று நம்புங்கள். அப்போதுதான் இன்றைய நாள் சிறப்பாக அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். மேலதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்து உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு நல்லதை செய்து கொடுத்து, மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புது வேலை தேடுவது புது வீடு வாடகைக்கு பார்ப்பது, புதுசாக சொத்து சுகம் சேர்ப்பது, புது தொழில் துவங்குவது இதுபோல முயற்சிகளை இன்றைய தினம் தாராளமாக மேற்கொள்ளலாம். இன்று சனிக்கிழமை பணம் சம்பந்தப்பட்ட புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது பெருமாளையும் கொஞ்சம் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தனதானியம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மன நிறைவான நாள் இது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். சோம்பேறித்தனத்துடன் அமர்ந்தால் எல்லா வேலையிலும் பிரச்சனை வந்து உங்களை தாக்கும். பிறகு இந்த நாள் இறுதியில் பயங்கரமான தலைவலியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நேரத்தை வீணடிக்காமல், அந்தந்த நேரத்திற்கு அந்தந்த வேலையை செய்து முடியுங்கள் அதுதான் இன்றைய நாளுக்கு நல்லது
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பம்பரம் போல சுற்றி வேலை செய்வீர்கள். உங்களை பார்ப்பவர்களுக்கு சின்ன பொறாமை இருக்கும். நமக்கும் இதுபோல வாழ வேண்டும் என்ற ஆசை வரும். அந்த அளவுக்கு உங்களுடைய பேச்சும் திறமையும் வெளிப்படும். வசீகரத் தோற்றத்தோடு வலம் வரப்போகிறீர்கள். என்ஜாய் பண்ணுங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். டென்ஷன் இல்லாத நாளாக இருக்கும். பண பிரச்சனை தீரக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் நீண்ட நாள் துரத்தி வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். சந்தோஷம் கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உழைப்பு உழைப்பு என்று இருப்பீர்கள். வாரத்தின் இறுதி நாளாக இருந்தாலும், நாளை விடுமுறை என்ற ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். ஆனால் கஷ்டப்பட்டு இந்த நாள் முடிவதற்குள் எப்படியோ உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.