மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் கூடுதலாக வாய்ப்புகள் இருக்கிறது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். டிஸ்கவுண்டில் பொருட்களை விற்றால், ஏமாந்து வாங்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி வேலை வியாபாரம் தொழில் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தேவையற்ற போட்டி பொறாமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. யாரையும் எதிர்த்து சண்டை போடாதீங்க. பிரச்சனைகள் வந்தாலும், நீங்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும். வம்பு வழக்குகளுக்கு போகவே கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்றைய நாள் நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக இருக்கும். இதனாலேயே தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நல்ல சந்தர்ப்பங்களையும் கைநழுவ விட்டு விடுவீர்கள். வேலை வியாபாரம் எல்லாவற்றிலும் நிதானம் தேவை. புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாள். நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய நாள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சோம்பேறித்தனம் உங்களை விட்டு அகலும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மனக்கவலை இருக்கும். எந்த ஒரு வேலையிலும் மனது ஆர்வத்தோடு ஈடுபடாது. இதனாலையே வேலை தொழில் எல்லாம் கொஞ்சம் பின் தங்கிய நிலையில் தான் இருக்கும். இந்த நாள் இறுதியில் திருப்தி அற்ற சூழ்நிலை நிலவும். இந்த நாள் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை குறையும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சீக்கிரம் கற்றுக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மூன்றாவது நபரின் பேச்சை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வீட்டு விஷயங்களை புது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். உங்களைப் பார்ப்பவர்களுக்கு லேசாக பொறாமை ஓடும். இதுபோல நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும். அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்க கூடிய அளவுக்கு உங்களுடைய சிந்தனையும் பேச்சும் இருக்கும். நல்லதே நடக்கும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நினைத்து பார்க்காத நல்ல செய்தி தொலைபேசியின் மூலம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிக்கலான பிரச்சனைகள் கூட சுலபமாக தீர்வு கிடைக்கும். கடன் சுமை குறையும். வாரா கடன் வசூல் ஆகும். பெரிய அளவில் பிரச்சினையாகும் விஷயங்கள் கூட ஒன்றுமில்லாமல் போகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் கண்ணும் கருத்தும் இருக்கும். உழைப்பு உழைப்பு என்று உங்கள் வேலையை மட்டும் பார்ப்பீர்கள். உங்கள் குடும்பத்தை முன்னேற்றுவதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கு பணத்தை சேர்க்க இன்றைய நாளை தேர்ந்தெடுக்கலாம். சேமிப்பு பல மடங்கு உயர இந்த நல்ல நாள் உங்களுக்கு உதவி செய்யும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். பாசிட்டிவ் எனர்ஜியோடு பேசுவீர்கள். உங்களுடைய பேச்சு நாலு பேர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்கும்படி அமையும். நல்லதே நடக்கும். வருமானம் பெருகும். கணவன் மனைவி உறவு பலப்படும். டென்ஷன் குறையும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனுபவரீதியாக நாலு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.