மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ரொம்பவும் நிதானமான நாளாக இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். முன்கோபம் குறைந்து பக்குவம் வெளிப்படும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த பகை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். நீங்க தூர பயணங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். அலைச்சலால் உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலைகளில் கவனமாக நடந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். உற்சாகம் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற சிந்தனை இந்த நாள் வேலைகளை கொஞ்சம் பாதிக்கும். சிந்தனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துங்கள். நடந்த எந்த விஷயத்தையும் யாராலும் மாற்ற முடியாது. கடந்து சென்ற நேரத்தை யாராலும் திருப்பிக் கொடுக்க முடியாது. ஆகவே கவலைகளை தூர வைத்துவிட்டு, வேலையில் மட்டும் அக்கறை காட்டுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எப்படியாவது குறித்த வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடத்தில் இருக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட மனதில் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கை சிறந்த அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். நல்லது கெட்டதை புரிந்து கொள்வீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன்கள் இருக்கும். வியாபாரத்தில் நிதானம் கட்டாயம் தேவை. அவசர முடிவுகள் எடுக்கக் கூடாது. செலவுகளை குறைக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நிதானதோடு இருக்க வேண்டும். புது முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் அனுபவசாலிகளின் கருத்தை கேட்பது நல்லது. அடம் பிடித்து எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் விலகக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கடன் சுமை குறையும். வாழ்க்கைத் துணை மீது அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் இருந்த குழப்பங்கள் தெளிவு பெறும். எதிரிகளால் வந்த பிரச்சனைகள் விலகும். குழந்தைகளுடைய நன்மைக்காக எதிர்கால சேமிப்பை உயர்த்த சில பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அது நல்லபடியாக லாபகரமாக அமையும். பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது, தங்கத்தின் முதலீடு செய்வது போன்ற முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. உறவுகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. அக்கம் பக்கம் வீட்டினரோடு எந்த சண்டையும் வைத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். வேலையில் அனுசரணை தேவை. மேலதிகாரிகளை, பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் பெருகும். சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள். வருமானத்தை பெருக்கிக் கொள்ள நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். புதிய பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆகவே இன்று நிதானத்தோடு சிந்தித்து நடக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பம் இருக்கும். வேலையில் நெருக்கடி, பணத்தில் நெருக்கடி என்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கும். வாழ்க்கையில் நல்லதே நடக்காதா என்ற விரத்தியோடு சிந்திப்பீர்கள். கவலைப்படாதீர்கள் இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது விரைவில் நல்லது வீடு தேடி வரும்.