Wednesday, 12 February 2025

இன்றைய ராசிபலன் - 12.02.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. செய்யும் வேலையில் தாமதம் உண்டாகலாம். செல்லும் இடத்திற்கு தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வெளியூருக்கு செல்வது, பஸ் புக்கிங், ட்ரெயின் புக்கிங், ஏதாவது இருந்தால் குறித்த நேரத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு செல்லவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு உழைப்பு, உழைப்பு என்ற எண்ணம் தான் இருக்கும். கையில் எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள்‌. பாராட்டுகள் கிடைக்கும் நாள். ஊதிய உயர்வு கிடைக்கும் நாள். முன்னேற்றம் கிடைக்கும் நாள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சி அபரிவிதமாக இருக்கும். சொல்லி புரிய வைக்க முடியாது. இனம் புரியாத ஒரு சந்தோஷ ராகம் மனதிற்குள் கேட்கும். ஏனென்று காரணம் எல்லாம் சொல்ல முடியாது. இளைஞர்களுக்கு அது ஒரு சுகமான அனுபவம். நடுத்தர வருடத்தினருக்கு அது ஒரு சுகம். முதியவர்களுக்கு அது ஒரு தனி சுகம். அவரவர் வாழ்க்கைக்கு தேவையான சந்தோஷம் இன்று கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்மராசிக்காரர்கள் இன்று வேகத்தை விட விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு செயலிலும் ஆழ்ந்த நோக்கத்தோடு சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். சுலபமாக சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் என்று நேர்மையாக நடந்து கொள்வீர்கள். யாருடைய வம்புக்கும் போக மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாள். வேலையில் முன்னேற்றம் தரும் நாள். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் செய்ய முடியாத பணத்தை இன்று வசூல் செய்து சாதனை படைப்பீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள், அல்லது எதிர்கால சேமிப்பை உயர்த்துவீர்கள். சொத்து சுகம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டலாம். உங்களுக்கான நல்லது நிச்சயம் நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். எந்த வேலையை உங்களிடம் கொடுத்தாலும் திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவத்தில் இருப்பீர்கள். எதிரிகளை துரோகிகளை மன்னித்து விடுவீர்கள். அமைதியான சுபாவத்தோடு நடந்து கொள்வீர்கள். இனம் புரியாத பக்குவம் உங்களிடத்தில் இருந்து வெளிவரும். இறை நம்பிக்கை கூடும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல லாபத்தை கைநிறைய அந்த கடவுள் உங்களுக்கு கொடுப்பான். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளுடைய மனது சந்தோஷப்படும்படி பெற்றவர்கள் நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். கடன் சுமை குறையும். சேமிப்பு உயரும். பெண் பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். மேனேஜர் தொல்லையால் சில பேர் அவதிப்படுவீர்கள். கண் திருஷ்டி விழுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அனாவசியமாக அடுத்தவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
SHARE