இன்றைய ராசிபலன் - 03.02.2025..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். நல்ல விஷயங்கள் துவங்குவதை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போதும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். நினைத்த வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலையில் இருந்து வந்த இடர்பாடுகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதி நிலைமை சீராகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக முடியும்.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளை பொறுத்தவரை மனு அமைதி இருக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் பார்ட்னரோடு, சக வியாபாரிகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். கடன் தொகை வசூல் ஆகும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களோடு நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைகளை எல்லாம் சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுத்து நல்ல பெயரும் வாங்குவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயமும் பதட்டமும் இருக்கும். ஒரு வேலையை முழு ஈடுபாடோடு செய்ய முடியாது. இதனால் மேல் அதிகாரிகளோடு திட்டு வாங்க வேண்டிய வாய்ப்புகளும் உண்டாகும். வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மனக்கவலை இருக்கும். பிள்ளைகளைப் பற்றிய டென்ஷன் உண்டாகும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரவும் வாய்ப்புகள் உள்ளது. மனதை அலைபாய விடாதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் மன ஒருமைப்பாடு இல்லை என்றால் பிரச்சனைகள் உண்டாகும்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நினைத்த பணம் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சுகம் சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரமும் தொழிலும் வேலையும் நல்லபடியாக நடக்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்கள் இன்று காலையிலிருந்து சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சோர்ந்து போகக்கூடாது. நேரம் பொன் போன்றதாக இருக்க வேண்டும்.இந்த நாள் அப்போதுதான் இனிய நாளாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி தரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன மகிழ்ச்சியை அடைவீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் நினைத்ததை விட நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் முழு ஆர்வத்தையும் காட்டுவீர்கள். நல்ல பெயர் எடுக்க கடினமாக உழைப்பீர்கள். வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஜெயித்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உங்களை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். வேலையில் சொன்ன சொல்லை காப்பாற்றி தலை நிமிர்ந்து நிற்பீர்கள். நடக்கவிருந்த பெரிய நஷ்டம் உங்களால் தவிர்க்கப்படும் பாராட்டுகளும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பணத்தை கடவுள் இனிமேல் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான். மேலதிகாரிகளுடைய ஆதரவோடு வேலையில் முன்னேறி செல்வீர்கள்.