Tuesday, 7 January 2025

யாழில். நிலத்தில் விழுந்து கிடந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் - ஐவர் கைது..!!!

SHARE


யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸாரினால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஐவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு பின்னர் நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியை வெளியிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஐவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
SHARE