யாழில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு..!!!
தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.