இன்றைய ராசிபலன் - 31.01.2025..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களுக்கான தெளிவு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். தீராத பிரச்சனைகள் தீரும். உங்களுடைய வேலைப்பாடுகள் ரொம்ப ரொம்ப சிறப்பாக இருக்கும். அடுத்தவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். நிம்மதி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. முதியவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து பக்குவமாக செய்வீர்கள். மனநிறைவை அடைவீர்கள். வேலை தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற முன்கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிரச்சனையே இருக்காது. ஆனால் உங்களுக்கு அடிக்கடி கோபம் வரும். டென்ஷன் ஆவீர்கள். வேலையில் சின்ன பின்னடைவு உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டு டென்ஷனை அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டாம். அலுவலக டென்ஷனை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம். அது தான் இன்று உங்களுக்கு நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் உழைத்த உழைப்பிற்கு தகுந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். சுப காரிய செலவுகள் செய்வீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். வேலையில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் அடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மேலதிகாரிகளாக இருந்தால் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களுடைய தவறை மன்னித்து விடுவீர்கள். தேவையற்ற எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடுகள் பற்றிய சிந்தனை இருக்கும். வங்கி கடன் கிடைக்கும். உற்சாகமான நாளாக இந்த நாள் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய நாளாக இருக்கும். நல்ல விஷயங்கள் வீடு தேடி வரும். நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். உங்களுக்கு தகுந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களை இருந்து ஒதுங்கி விடுங்கள். அவ்வளவுதான். எந்த ஒரு விஷயத்தையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் கூட எதிரியாக மாறுவார்கள். நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்யும் நல்ல வேலைகள் கூட பிரச்சினையாக முடியும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். தவறு என்று தெரிந்தால் கூட, அதை தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டாம். இன்று பிரச்சினைகளை பார்த்தால் கண்களை மூடி கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய வேலை ஆட்களை சேர்க்கலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும், உங்கள் வீட்டு வாசல் கதவை அதுவே தட்டும். நல்லதே நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சில பல தொல்லைகள் இருக்கும். டென்ஷனை கொடுக்கக்கூடிய நபர்கள் உங்களுடன் இருப்பார்கள். அதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் இன்றைய நாள் வேலையை செய்ய வேண்டும். வேறு வழி கிடையாது. என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். சிவசிவ என்று இந்த நாள் கடந்து போகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சில பல தொந்தரவுகள் தொடரும். வாடிக்கையாளர்களை கவனிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். உடல் அசதி இருக்கும். எப்போதுதான் தூங்க செல்ல போகின்றோம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். இந்த நாள் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு, கொஞ்சம் பிரச்சனைகளோடு தான் இருக்கும். அனுசரித்துக் கொள்ளவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். முதலீட்டில் இருந்து நிறைய லாபத்தை எடுப்பீர்கள். அடமானத்தில் வைத்திருந்த நகையை மீட்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை நல்லதே நடக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் செய்யலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். லாபம் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வேலையில் நீங்கள் நினைத்த விஷயங்களை நடத்திக் காட்டுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படக்கூடிய நாள். வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் சின்னதாக பின்னடைவு ஏற்படும். கூடுதல் உழைப்பை போட்டு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.