மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனரீதியாக சில குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தெளிவாக இருங்கள். அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு உங்களுடைய மனதை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு சரி என்று எது படுகிறதோ, அதை மட்டும் செய்யுங்கள். அதையும் மீறி குழப்பமாக இருந்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நம்பிக்கை உள்ளவர்களிடம் கலந்துரையாடுங்கள். பிறகு ஒரு முடிவை எடுங்கள். முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதை நாளை தள்ளி வைத்தாலும் தவறு கிடையாது. அவசரப்பட்டு இன்று எந்த முடிவும் எடுக்காதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை நடக்கும். நல்ல விஷயங்கள் செய்வதில் உங்களை, நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையில் இருந்து வந்த தடங்கல்கள் தடைகள் நீங்கி, நல்ல முன்னேற்ற பாதை உண்டாகும். மேலதிகாரிகளுடைய சப்போர்ட் கிடைக்கும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் வீடு தேடி வரும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். யாரையும் நம்பி ஏமாறக்கூடாது. குறிப்பாக மலிவு விலைகளில் ஏதாவது பொருள் கிடைத்தால் அதை வாங்க வேண்டும் என்று நினைக்காதீங்க. முதலுக்கே மோசமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் புதிய முதலீட்டின் போது கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை நம்பவும் கூடாது. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று புரிதல் அதிகமாக இருக்கும். அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்பதை முன்கூட்டியே கணித்து விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகள் உங்களை விட்டு தானாக விளக்குவார்கள். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், சொந்த ஊர் திரும்ப நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். பிரச்சனைகள் வரக்கூடிய சமயத்தில் நண்பர்களும் உறவுகளும் உறுதுணையாக நிற்பார்கள். சொந்த பந்தங்களின் பலத்தை தெரிந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புது மனிதர்களின் அறிமுகம் நல்லதையே செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. கணவன் மனைவி சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. வயதில் மூத்தவர்களை எதிர்த்து பேசக்கூடாது. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது. பொறுமையாக இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வேலைகளை செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவும். மறதியின் காரணமாக சில பல பிரச்சனைகள் வரலாம். முக்கியமான வேலையாக இருந்தால், ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். நேரத்திற்கு சாப்பிட்டு, நேரத்திற்கு வேலை பார்த்து இன்றைய நாளை ஒரு ஒழுங்கு முறையோடு நடத்திச் செல்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளின் மூலம் மனவருத்தம் ஏற்படும். துன்பம் ஏற்படும். கவலை கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். மேனேஜர் திட்டினால் அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். வேலையில் முன்னேற்றத்தை காண்பிக்கவும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பொறுமை காக்கவும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எல்லோரையும் சமாளித்து ஒரு வேலையை முடித்து, முன்னேறி வருவதற்குள் போதும் போதும் என மாறிவிடும். ஒரு பேருந்தில், ஏறி டிக்கெட் எடுப்பதற்கு கூட இன்று சிரமங்கள் இருக்கும். வண்டியில் சரியான நேரத்தில் பெட்ரோல் தீரும். ஆகவே முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை தான். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கடன் பாரம் குறையும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இந்த நாளில் வராது என்ஜாய் பண்ணுங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகளிலிருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். சந்தோஷம் அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனமாக இருக்கவும்.