இன்றைய ராசிபலன் - 23.01.2025..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு மனதார உதவி செய்வீர்கள். உங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அறியாமல் செய்த தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்வீர்கள். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். இன்றைய நாள் மன நிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நினைத்தபடி நல்லபடியாக நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளை பொறுத்தவரை சுப செலவு, வரவு ஏற்படும். சொந்த பந்தங்களுக்கு சீர் வைப்பது, சீர் வாங்குவது போன்ற குடும்ப சடங்குகளில் கலந்து கொள்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் சின்ன சின்ன முன்னேற்ற தடைகள் இருக்கும் ஜாக்கிரதை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் நன்மையை தரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அயராது உழைத்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொண்டு வேலை செய்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் நன்மைகள் நடக்கும். நீண்ட நாள் நடக்காத, நல்ல விஷயங்களை இன்று முயற்சி செய்து பாருங்கள். புது வேலை தேடுவது, புது வீடு பார்ப்பது, இதுபோல நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். ஏதாவது சொத்து சுகம் வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்றால் இன்றைய தினம் முயற்சி செய்யலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை குறைய கூடிய நாளாக இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் உள்ளது. ஏதாவது ஒரு தொகை கையை வந்து சேரும். உங்களுடைய பண பிரச்சினைகளை சரி செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று வேகத்தை விட விவேகத்தோடு செயல்படுவீர்கள். குழப்பமான விஷயத்திற்கு கூட சுலபமான தீர்வை கொடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்களை எல்லாம் திறமையாக சரி செய்து, வியாபாரத்தை நல்வழிப்படுத்துவீர்கள். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு நல்லது செய்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு, நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்ல சுப செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற செலவுகளால் நிதி நிலைமை கொஞ்சம் மோசமாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் நிறைய நன்மைகள் செய்யப் போகிறீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பரிசு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நிதி நிலைமை ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். வேலையில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். பிரஷர் இருக்கும். கொஞ்சம் சமாளித்து தான் ஆக வேண்டும். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சி செய்யலாம் நல்லதே நடக்கும்