Monday, 20 January 2025

இன்றைய ராசிபலன் - 20.01.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் மனதிருப்தி அடைவீர்கள். சுறுசுறுப்பாக வேலையை செய்வீர்கள். உங்களுடைய சுபாவமே இன்று உங்களுக்கு நல்லதொரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். அடுத்தவர்களிடம் முக மளர்ச்சியோடு பேசுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சொந்த ஊரில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் சுறுசுறுப்பாக வேலையை துவங்குவார்கள்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அடுத்தவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் பார்ப்பீர்கள். சிக்கல் நிறைந்த வேலைகளை கூட சுலபமாக செய்வீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். பெரியவர்களின் ஆசி, கடவுளின் ஆசி கிடைக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நிறைய நல்ல ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகள் பல வகையில் வந்தாலும், உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்து தரக்கூடிய ஆர்வமும் இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இன்பம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சொந்த பந்தங்களோடு இருந்து நேரத்தை செலவு செய்வீர்கள். கோர்ட் கேஸ்க்கு வழக்குகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். முதலீட்டில் கவனம் செலுத்தவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று மட்டும் தான் இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். வியாபாரத்தில் முன்னேற்ற பாதையில் பயணம் செய்தீர்கள். நிறைய லாபம் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். இன்று உங்களுடைய பெருமையை, சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பேசுவார்கள். கண்திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதை நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து ஒரு படி வாழ்க்கையில் உயர நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக பேசாதீர்கள். முன்கூபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடு செய்ய வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய இரக்க குணம் வெளிப்படும். மனசாட்சியோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு செய்த கெடுதல் துரோகத்தை நினைத்து, மன வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்கள். இன்று இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும். நீண்ட நாள் மனபாரம் குறையும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று நேர்வழியில் நடந்து கொள்வீர்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பொய் சொல்ல மாட்டீர்கள். குறிப்பாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் இழுபறி இருக்கும். புதிய எதிரிகள் உருவாகலாம். செய்யும் வேலையில் தொல்லைகளை கொடுக்கலாம். இப்படிப்பட்ட இடர்பாடுகளை சந்தித்தாலும் இன்று நீங்கள் நீங்களாக இருப்பீர்கள். உங்களுடைய நேர்மையை நிறைவேற்றும் இந்த நாள் நிறைய நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப பொறுமையாக இருப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். வேலையில் கண்ணும் கருத்தும்மாக நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். லாபம் உயரும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. செலவை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். அன்பு வெளிப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் பொறுமை தேவை அவசரப்படக்கூடாது.
SHARE