Thursday, 16 January 2025

இன்றைய ராசிபலன் - 16.01.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ரொம்ப நாளாக செய்யாமல் கிடப்பில் போட்டிருந்த வேலைகளை எல்லாம் இன்று சுறுசுறுப்பாக செய்ய தொடங்கி விடுவீர்கள். விடுமுறை நாட்கள் முடியப்போகிறது. வேலை நாட்கள் துவங்கப் போகிறது. அதனால் எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாக நடக்கும். சோம்பேறித்தனம் உங்களை விட்டு தூர சென்று விடும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். எந்த விஷயத்திற்கும் அவசரப்பட மாட்டீர்கள். உங்களால் இயன்ற உதவியை, தானத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள். குலதெய்வ வழிபாடு முன்னோர்கள் வழிபாடு மனநிறைவை கொடுக்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பெரியவர்களின் அறிவுரை நல்ல விஷயங்களை நல்வழி காட்டிக் கொடுக்கும். உங்களுடைய நிதானம் எதிர்காலத்திற்கு தேவையான நன்மைகளை செய்து கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவார்கள். மாலை நேரத்தில் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் அதிகம் நடக்கும். தேவையற்ற எதிரிகள் தானாக விலகுவார்கள். உடல் உபாதைகள் நீங்கும். சுறுசுறுப்பு இருக்கும். அலுவலக வேலை, வியாபாரம் என்று அதற்கான நேரத்தில் அந்தந்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் உறவுகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணங்கள் கொஞ்சம் சிக்கலில் சிக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக செய்யாமல் வைத்திருந்த நல்ல காரியங்கள் எல்லாம் இன்று நடக்க துவங்கும். பெரியவர்களின் ஆசியும் இறைவனின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையில்லாதவர்களிடம் அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.



துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையை முடிக்காமல் கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுக்க மாட்டீர்கள். பம்பரம் போல சுழன்று சுழன்று வேலை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களால் முடிந்த தான தர்ம காரியத்தில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளுக்கு தேவையான நல்ல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து கொடுப்பீர்கள் மன நிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். உடல் அசதி நீங்கும். பெண்கள் தங்களுடைய தவறை திருத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக செல்லும். எதிர்பாராத லாபம் கையை வந்து சேரும். நிதிநிலைமை சீராகும் கடன் தொல்லை குறையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். தேவையற்ற டென்ஷன் வரும். வியாபாரத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். கடைக்கு வந்தவர்கள் உங்களை தேவையில்லாமல் பிரச்சனைக்கும் இழுக்கலாம். இதுபோல பிரச்சனைகளை எதிர்கொண்டு டென்ஷன் கொஞ்சம் கூடும். ஆகவே ஜாக்கிரதியாக இருங்கள். பொறுமையை கைவிடாதீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பெரியவர்களின் ஆசி இறைவனின் ஆசி கிடைக்கும். சொந்த ஊருக்கு வந்தவர்கள் எல்லாம் தங்களுடைய அலுவலகப் பணியை பார்ப்பதற்காக செல்ல வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது கொஞ்சம் மன வருத்தம் ஏற்படும். இன்றுக்கான நேரமே பத்தாது. அவ்வளவுதான் மற்றபடி சந்தோஷம் நிறைய, கஷ்டம் கொஞ்சம் கவலை கொஞ்சம் இந்த நாளில் இருக்கத்தான் செய்யும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல கவனிப்பு என்று ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள். அளவோடு சாப்பிடுங்கள். அளவுக்கு மீறி சாப்பிட்டால், அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற படி வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும். செலவை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள், தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுடைய ஆசையை நிறைவேற்றிக் கொடுக்க அதிகமாக முயற்சி எடுப்பீர்கள். தந்தையரின் கவலை என்ன என்பதை சில ஆண்கள் என்று புரிந்து கொள்வீர்கள். நிதி நிலைமை கொஞ்சம் கஷ்டத்தில் தான் இருக்கும். செலவை குறைப்பது நல்லது. வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. மற்றபடி எல்லா விஷயங்களும் சுமூகமாக நடக்கும்.
SHARE