Tuesday, 7 January 2025

இன்றைய ராசிபலன் - 07.01.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனமாக இருங்கள். முன்பின் தெரியாத நபரை நம்பி கடன் கொடுக்கவும் வேண்டாம். கடன் வாங்கவும் வேண்டாம். வேலையை பொறுத்தவரை பெரிசாக எந்த பிரச்சனையும் இருக்காது. வியாபாரத்திலும் முதலீட்டில் கவனம் தேவை.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்கள் இன்று எந்த விஷயத்தையும் அனாவசியமாக அதிகமாக யோசிக்க கூடாது. அதிகமான சிந்தனை செய்பவர்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்படும். மனதிற்கு சரி என்று பட்டது செய்யுங்கள். சரி என்று படவில்லையா. அந்த வேலையை விட்டு விட்டு ஒதுங்கி நில்லுங்கள். அவ்வளவுதான். தேவையற்ற சிந்தனை இன்றைய வேலையை கெடுத்துவிடும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்வில் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத நல்லது நடக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்கள் வெற்றி அடையும். மன நிம்மதியை பெறுவீர்கள். உறவுகளோடு சேர்ந்து நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உற்சாகப் பிறக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். தேவையான அளவு ஓய்வும் எடுத்துக் கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்த, வியாபாரத்தை நிறைய லாபத்தை எடுக்க அயராது உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. ஆக அடுத்தவர்கள் பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். யாரையும் கை ஓங்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். ஒரு துளி அளவும் சோம்பேறித்தனம் இருக்காது. உங்களுடைய வேலையை சொன்ன நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்திலும் தேவைக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். நாலு பேர் முன்பு தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். கொஞ்சம் தற்புகழ்ச்சி இருக்கும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனபயத்தால் நல்ல வாய்ப்புகள் கைவிட்டு நழுவிச் செல்லலாம். தேவையற்ற மன பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு இறைவனின் மீது பாரத்தை போட்டு வேலையை செய்ய துவங்கவும். வரும் வாய்ப்புகளை தட்டிக் கிழிக்க கூடாது. புதிய முயற்சி நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தரும். பயத்தை நீக்குங்கள் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் கிடப்பில் போட்ட வேலைகளை கையில் எடுத்து நிறைவாக செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். நிதி நிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். பண பிரச்சினை, மன கஷ்டம், குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை என்று எல்லா விஷயத்திற்கும் கடவுள் பச்சைக்கொடி காட்டி விடுவான். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நிதி நிலைமை சீராகும் கடன் சுமை விலகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய ஆர்வத்தில் ஒரு துளி கூட குறையாது. காலை எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தீர்களோ, அதே அளவுக்கு மாலை வரை சுறுசுறுப்பாக இருந்து வேலைகளை முடித்துக் கொடுப்பீர்கள். லாபகரமான நாளாக அமையும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பம் இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் பேச்சை கேட்கவும். அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை அந்தந்த நேரத்தில் சரியாக நடத்த முடியும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை நடக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக பேசாதீர்கள்.
SHARE