இன்றைய ராசிபலன் - 02.01.2025..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சந்தோஷமாக இருப்பீர்கள். அதேசமயம் அமைதியாகவும் இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். சில நண்பர்கள் எதிரியாக மாற வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனை இருக்கும். தேவையற்ற மன கவலைகள் இருக்கும். வேலை சரியாக ஓடாது. வியாபாரத்தில் கவனம் இருக்காது. இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். கவலைப்படாதீர்கள் இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். வேலை சுறுசுறுப்பாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். நஷ்டம் லாபமாக மாறும். உற்சாகம் பிறக்கும். கடன் சுமை குறையும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று முழு மனதோடு ஆர்வத்தோடு வேலை செய்ய வேண்டும். அரைகுறை மனதோடு செய்யக்கூடிய வேலையில் பிழைகள் ஏற்படும். பிறகு திட்டுவாங்க வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். ஆர்வம் இல்லை என்றால் வேலையை செய்யாமல் இருப்பதே நல்லது. தேவையில்லாத சிக்கலில் நீங்களாகவே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு இருக்கும். தூக்கம் வேலையை சரியாக செய்ய விடாது. உடல் சோர்வை நீக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். மனதை 10 நிமிடம் தியான நிலையில் வையுங்கள். பிறகு வேலையை பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. மனது சந்தோஷமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவாக செயல்படுவீர்கள். யாரையும் நம்பி உங்களுடைய முயற்சிகளை கைவிட மாட்டீர்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பார்த்து வியப்படையும் அளவுக்கு திறமை வெளிப்படும் நாள் இது. வியாபாரத்திலும் நினைத்ததை விட லாபத்தை அதிகமாக பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். மாணவர்களுக்கு கலைஞர்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய நாள். முன்னேற்றம் அடையக்கூடிய நாள். வீட்டில் சந்தோஷம் இரட்டிப் பார்க்கும். சுப காரிய தடை விலகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களை பற்றி அதிகமாக சிந்திப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் சுயநலமாக செய்ய மாட்டீர்கள். மன நிம்மதி ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். நிதி நிலைமையில் உயர்ந்த நிற்பீர்கள். பாராட்டும் புகழும் உங்களை தேடி வரும். கெட்ட பெயர் நீங்கும். சந்தோஷம் இருக்கும். குடும்பத்தோடு அதிகம் நேரத்தை செலவு செய்தீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கெட்டது புரியக்கூடிய நாளாக இருக்கும். எதிரிகளுக்கு சவாலாக விளங்குவீர்கள். உங்களை போட்டி போட்டு யாராலும் ஜெயிக்க முடியாது. துணிச்சல் வெளிப்படும். அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் வெளியில் கொட்டி விடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். நல்ல தூக்கமும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை மோசமாக இருக்கும். சம்பளம் வரும் வரை கொஞ்சம் போராட்டம் தான். இருந்தாலும் சமாளித்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக நடக்க வேண்டும். அடுத்தவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது.