Wednesday, 1 January 2025

இன்றைய ராசிபலன் - 01.01.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் ஒருவிதமான நிம்மதி இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். புத்தாண்டு உங்களுக்கு புத்தம் புது சந்தோஷத்தை கொடுக்கும். தேவையற்ற செலவுகள் இன்று குறையும். வருமானம் உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் முன்பு தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழல் உண்டாகும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். முயற்சிகளில் ஜெயித்து காட்டுவீர்கள். இந்த புத்தாண்டு இனிதாக பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். சந்தோஷத்திற்கு எந்த குறையும் வராது. குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு இனிதே அமைய வாழ்த்துக்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் பல மடங்கு கூடுதலாக கிடைக்கும். மன நிறைவோடு வேலை செய்வீர்கள். எதிர்பாராத முன்னேற்றம் மன நிறைவை கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முடிந்தால் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். இந்த வருடம் உங்களுக்கு அபரவிதமான அதிர்ஷ்டம் அடிக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். போட்டிகளிலும் சவால்களிலும் உங்களுக்கே முதலிடம் கிடைக்கும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு போது கவனமாக இருக்கவும். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நன்மைகள் கொஞ்சம் நடக்காது. சின்ன சின்ன ஏமாற்றம் உண்டாகும். அலைச்சல் இருக்கும். இருந்தாலும் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு குறையும் வராது. இந்த ஆங்கில புத்தாண்டு இனிதே துவங்கும். சுப செலவுகள் உண்டாகும். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராமல் நீங்கள் செய்த முதலுட்டில் இருந்து லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதமும் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும். இந்த வருட துவக்கம் அமோகமாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷமிரட்டிப்பாகும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வியாபாரம் வேலை, எதிர்பார்த்ததைவிட நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு இன்பமான நல்ல நினைவுகளை கொடுக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மற்றபடி சந்தோஷம் தான். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். எல்லா வகையிலும் வருமானம் வந்து பையை நிரப்பும். சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று சுகமாக உங்களுடைய நாளை கடந்து செல்வீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கேளிக்கை கொண்டாட்டங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நாள் இறுதியில் கொஞ்சம் உடல் சோர்வு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியின் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்து தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும்.
SHARE