வவுனியாவில் விபத்து - யாழ் இளைஞன் உயிரிழப்பு..!!!
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வவுனியா - கோவில்குளம் பகுதியில் புதன்கிழமை(25) இரவு இரு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.