Thursday, 12 December 2024

யாழ் . நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட கைதி உயிரிழப்பு..!!!

SHARE

யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு , சிறையில் வாகனத்தில் இருந்து அழைத்து வரும் வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனை அடுத்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டது.
SHARE