Friday, 13 December 2024

மீண்டும் எரிபொருள் தட்டுபாடு ஏற்படுமா? பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறுவது என்ன..!!!

SHARE


நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் J.D. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் ஒன்று திரும்பிச் சென்றதாக வெளியான செய்தி தொடர்பான உண்மைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த எரிபொருள் கொள்கலன் கப்பல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கொண்டுவரப்பட்ட கப்பல் அல்ல எனவும், எனவே அது தொடர்பில் எம்மால் தலையீட்டினை செலுத்த முடியாது எனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் J.D. ராஜகருணா தெரிவித்தார்.

இந்த கப்பல் திரும்பிச் சென்றதன் காரணமாக இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. நாட்டின் தேவைக்கு ஏற்ப எரிபொருள் தொகை காணப்படுகின்றது.

நெருக்கடி இன்றி எரிபொருளை விநியோகிக்க முடியும் எனவும்,
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை எரிபொருள் முன்பதிவுகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் J.D. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
SHARE