Tuesday, 31 December 2024

யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்த பெண்..!!!

SHARE
file image

யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாணம் - மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தின் முன்பாக தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பெண்ணொருவர் பாய்ந்து உயிரைவிட முனைந்துள்ளார்.

எனினும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், கொடிகாமம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE