Friday, 6 December 2024

யாழில். கிணற்றுக்குள் வீழ்ந்து இரு குழந்தைகள் உயிரிழப்பு..!!!

SHARE

 

யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து இரண்டு ஆண் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இருபாலை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளிலேயே இந்த துயரச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து ரஜிவன் சுஜித் (வயது -3) என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது குழந்தையை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்த போதிலும், அந்தக் குழந்தை முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இருபாலை கிழக்குப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிரோசன் விமாத் (வயது -4) என்ற குழந்தை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சையின்போது நேற்று  உயிரிழந்துள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

SHARE