க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும் - பரீட்சை ஆணையாளர்..!!!
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
க.பொ.த. உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு மாதங்கள் காலவகாசம் தேவைப்படுகிறது.
எனவே, க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர மேலும் தெரிவித்துள்ளார்.