Tuesday, 24 December 2024

தென்மராட்சியில் தொடரும் மணல் அகழ்வு - நேரில் சென்று பார்த்த எம் . பி..!!!

SHARE

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

அந்நிலையில் இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நேற்றையதினம் திங்கட்கிழமை தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், சாவகச்சேரி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம், கரம்பகம் கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மண் அகழ்வு இடம் பெற்றுள்ள இடங்களை பார்வையிட்டதுடன் , மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


SHARE