இன்றைய ராசிபலன் - 31.12.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. எதிரிகளைப் வீழ்த்தி வெற்றியை நிலை நாட்டுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று மனதில் இனம் புரியாத சந்தோஷம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பிறக்கப் போகும் புது வருடம் உங்களுக்கு எல்லா செல்வ வளங்களையும் கொடுக்கும். அதே சமயம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்வில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த எதிரிகள் விலகுவார்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். நிதிநிலைமை சீர்படும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று அன்பு நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவு வேலைகள் எவ்வளவு பிரஷர் இருந்தாலும், அதை சரி கட்ட உறவுகளும் நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். டென்ஷன் குறைய கூடிய நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய மதிப்பு மரியாதையும் உயரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் இருக்கும். சேமிப்புகள் கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகளுக்கான வாய்ப்புகளும் இருக்கிறது. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள். எதிரிகளால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி இருக்கும். எந்த ஒரு வேலையையும் செய்து முடித்து விடலாம் என்று தைரியத்தோடு இருப்பீர்கள். எந்த இடத்திலும் கோழைத்தனம் வெளிப்படாது. திறமையான பேச்சும் உங்களுடைய நடவடிக்கையும் வெற்றியடைய காரணமாக இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் ராஜபோக உபசாரம் இருக்கும். வாழ்க்கை என்றால் இவனை போல் வாழ வேண்டும் என்று, அடுத்தவர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். முயற்சிகள் செய்யாமலேயே வெற்றி கிடைக்கும். தேவைகளுக்கு அதிக பண வரவு இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அது நல்ல லாபத்தை கொடுக்கும். வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சனைகள் நஷ்டங்கள் தானாக உங்களை விட்டு விலகும். புதிய மனிதர்களின் சந்திப்பு நல்ல அனுபவங்களை சொல்லிக் கொடுக்கும். செலவுகள் குறையும் சேமிப்பு உயரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நீங்களே உங்களை உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். சோம்பேறித்தனத்தை விரட்டி அடிப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தேவையற்ற கெட்ட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட இந்த நாள் நல்ல ஒரு வரமாக அமையும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடந்தால் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதி இருக்கும். முக்கியமான வேலைகளை மறப்பதன் மூலம் சில பல பிரச்சனைகள் வரலாம். எதுவாக இருந்தாலும் சின்னதாக கைபேசியில் அலாரம் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள். இன்று மறதியால் வரும் நஷ்டத்தை ஈடுகட்ட பல நாள் கஷ்டப்பட வேண்டி இருக்கும் ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் இருக்கும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புது மனிதர்களை நண்பராக சேர்த்துக்கொண்டு முக்கியமான விஷயங்களை எல்லாம் அவர்களிடம் சொல்ல வேண்டாம். மூன்றாவது நபரிடம் விலகி இருப்பது என்று நன்மையை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தாமதம் ஏற்படும். உடல் அசதி இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. செலவுகள் கையை கடிக்கும். சேமிப்பு கரையும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவை தெரிவிப்பார்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.