இன்றைய ராசிபலன் - 26.12.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஆகவே இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனை வந்தால் அனுசரித்து பேசுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நடத்தி முடிக்க முடியாத வேலையை கூட திறமையாக செய்து, நல்ல பெயர் வாங்கிக் கொள்வீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். சின்ன சின்ன பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். குறுக்கு பாதையில் செல்லக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. நேர்மையாக நடந்து கொண்டால் இன்று பெருசாக பிரச்சனைகள் இல்லை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். செய்த தவறுக்காக வருந்தி நேரத்தை வீணடிக்காமல், அடுத்தடுத்த வேலைகளை பார்த்து கடமைகளை சரிவர முடிப்பீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு இருக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்தீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். தேவையற்ற எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். சிக்கலான விஷயங்கள் கூட இன்று சரியாகிவிடும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கமும் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். உங்களுடைய வேலையை செய்ய விடாமல் சில பேர் பிரச்சனையாக வந்து நிற்பார்கள். எதிரிகளை சமாளிக்கவே இன்றைக்கு நேரம் போதாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நன்றாக சாப்பிட்டுவிட்டு பிறகு வேலையை துவங்கவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய வேலையை துவங்கலாம். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் முதலீட்டின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புகழ் தானாக தேடி வரும். அடுத்தவர்களுடைய பாராட்டு மழையில் நனைவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து கடந்த காலத்தை பற்றி பேசி நேரத்தை கழிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனதிற்கு ஒரு நிம்மதி தரக்கூடிய நாளாக இந்த நாள் அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் கைமீறி செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களை நீங்களே இழுத்து விட்டுக் கொள்வீர்கள். சிக்கலிலும் சிக்கிக் கொள்வீர்கள். அதிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்க போகிறீர்கள். ஆகவே அனாவசியமாக அடுத்தவர்கள் வேலையில் தலையிடாதீங்க. கழுவற மீனில் நழுவுற மீனாக இன்று நடந்து கொண்டால் தப்பிக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற டென்ஷன் தானாக குறையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரித்திலும் எதிர்பார்த்ததை விட லாபத்தை பெறுவீர்கள். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இன்று மனநிறைவும் சந்தோஷமும் கைநிறைய பணமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். நல்ல நல்ல வாய்ப்புகளை இழக்க உங்களுடைய கோபமும் அவசர புத்தியும் காரணமாக இருக்கும். பொறுமையாக செயல்படுங்கள். கோபத்தை குறைத்தாலே இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். எல்லா வேலைகளிலும் கவனமாக நடந்து கொள்வீர்கள். அலட்சியம் இருக்காது. அடுத்தவர்களுடைய உணர்வுக்கும் மரியாதை கொடுப்பீர்கள். வருமானம் கொஞ்சம் சீராகும். நிதி நிலைமையை மேம்படுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.