Wednesday, 18 December 2024

26 இலட்சம் ரூபாய் பண மோசடி : யாழில் வர்த்தகர் கைது..!!!

SHARE

யாழில், 26 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இவர் யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதான வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவரை இன்று 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
SHARE