இந்த வார ராசிபலன் 23.12.2024 முதல் 29.12.2024 வரை..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார நிலை கொஞ்சம் உயர்ந்து காணப்படும். குடும்பத்தில் சமாளிக்க முடியாத செலவுகளை எல்லாம் ஒரு வழியாக சரி கட்டி விடுவீர்கள். குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஃபீஸ் கட்டுவது, நீண்ட நாள் கட்டாத டியூ, இது போன்ற பிரச்சினையிலிருந்து இந்த வாரம் வெளிவந்து மன நிம்மதியை அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை. தினமும் விநாயகரை வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக் கூடிய வாரமாகத்தான் இருக்கும். கடன் சுமை குறையும். உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கையை வந்து சேரும். நீண்ட நாட்களாக சிக்கி தவித்து வந்த பிரச்சனைகளில் இருந்து கடவுள் உங்களை இந்த வாரம் நிச்சயம் விடுவித்து விடுவான். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பணப்பிரச்சனையில் மாட்டாமல் இருக்க சேமிப்பை அதிகப்படுத்துங்கள். மூன்றாவது நபரின் பேச்சை செவி கொடுத்து கேட்காதீர்கள். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு செல்லாதீங்க. மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும் தைரியமும் சுறுசுறுப்பும் அதிகமாக இருக்கும். பிரச்சனைகள் பல வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு கொஞ்சம் கூட சோர்வு உங்களிடம் இருக்காது. பிரச்சனையை கடந்து சென்று கொண்டே இருப்பீர்கள். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பான். வேலையிலும் பிரஷர் இருக்கும். வியாபாரத்திலும் டென்ஷன் இருக்கும். வீட்டிலும் சின்ன சின்ன தொல்லைகள் வரும். ஆனால் அதையெல்லாம் கடந்து போகக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கிறது சவாலான இந்த வாரத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் தினமும் அனுமனை வழிபாடு செய்யுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஒரே அதிரபுதியான வாரமாக இருக்கும். வேலைக்கு மேல் வேலை, பொறுப்புக்கு மேல் பொறுப்பு, வந்து உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். நிற்காமல் இந்த வாரம் நீங்கள் வேலை செய்யப் போகிறீர்கள். பயப்படாதீர்கள், வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சாப்பிட கூட நேரம் இருக்காது. இருந்தாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை செலுத்துங்கள். தினமும் பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். உடல் உபாதைகள் வரவும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் சின்ன சின்ன விஷயங்களை கூட கவனத்தில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி வருமானம் எப்போதும் போல இருக்கும். செலவுக்கு ஏற்ப கையில் பணம் தங்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். தினமும் அம்பாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும் வாரமாக இருக்கும். எல்லா வேலையிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய வேலையையும் சேர்த்து இழுத்துப் போட்டு செய்வீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கும் இந்த வாரம் நன்றாக கல்லாகட்டும். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். சுப செலவுகள் இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடக்க துவங்கும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். உதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இதில் அலுவலக வேலை, வியாபாரம் இவைகளை கவனிக்கவும் நேரம் பற்றாக்குறையாக இருக்கும். நேரத்தை சரி கட்டுவதில் இந்த வாரம் நீங்கள் கொஞ்சம் சிரமத்திற்கு ஆளாகலாம். கொஞ்சம் சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டால் நல்லது நடக்கும். தினமும் இறைவழிபாடு செய்யுங்கள். நேரத்தை கணக்கு போட்டு வேலை செய்யுங்கள். நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கைபேசியில் சோசியல் மீடியாவில் நேரத்தை செலவழிப்பது போன்ற தவறை மறந்தும் இந்த வாரம் செய்யாதீங்க. தினமும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள் அல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எத்தனை நாள் தான் இது போல கஷ்டத்திலேயே வாழ்வது என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் வரும். திடீரென பணம் காசு வரும். திடீரென கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக அமையும். அப்படி ஒரு சூப்பரான வாய்ப்பு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். பிரச்சனைகள் விலகப் போகிறது. முயற்சிகளை கைவிடாதீர்கள். நல்லதே நடக்கும். தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நினைத்ததை விட வேலை நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். தீரா குழப்பங்கள் தீரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். திறமை வெளிப்படும். உடல் அசதி நீங்கும். இந்த வாரம் நல்லது மட்டுமே நடக்கும். தினமும் முருகரை வழிபாடு செய்வது மேலும் சந்தோஷத்தை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் ரொம்பவும் இரக்க குணத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு முன் கோபமே வராது. எரிச்சல் வராது. அடுத்தவர்கள் உங்களுக்கு தீங்கு நினைத்தாலும் நீங்கள் அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்வீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவீர்கள். பிரிந்து போன கணவன் மனைவி உறவு, உடன் பிறந்தவர்கள் உறவு எல்லாம் ஒன்று சேரும். வேளையிலும் வியாபாரத்திலும் விட்டுப் போன நல்லது மீண்டும் உங்கள் கையை வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நிம்மதியான தூக்கமும் இருக்கும். குறிப்பாக இந்த வாரம் கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் வரும். செலவுக்கு ஏற்றவாறு வருமானம் இருக்காது. கைக்கு வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் வந்த சேராது. யாரை நம்பியும் இந்த வாரம் பணம் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்கவும். தொழிலிலும் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்களுடைய வேலைகளை நீங்கள் தான் பொறுப்பாக கவனிக்க வேண்டும். உங்கள் பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மீது பொறாமை குணம் கொண்டவர்கள் உங்களை பழிவாங்க வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். புதிய எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களிடம் அனுசரிமையாக பேசுங்கள். குறிப்பாக உயர் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு கீழே இருப்பவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. மரியாதை இல்லாமலும் நடத்தக் கூடாது. புதன்கிழமை ஞாயிற்றுக்கிழமை பைரவர் வழிபாடு உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் போராட்டம் நிறைந்த வாரமாக தான் இருக்கும். ஆனால் போராட்டத்தை கடந்து சென்றால், உங்கள் வாழ்க்கை பொக்கிஷமாக உங்கள் கையில் கிடைக்கும். கஷ்டமே படக்கூடாது, ஆனால் நல்லதும் நடக்க வேண்டும் என்றால் அது நடக்காத காரியம். உங்களுடைய கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். குறைவாக பேசுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் நடப்பதற்கு முன்பாகவே பேசி பேசி பெரிதாகாதீர்கள். இந்த வாரம் பொறுமையாக இருக்கணும். அதேசமயம் கடினமாக உழைக்கணும். அதேசமயம் தலைகணமும் இருக்கக் கூடாது. ஜாக்கிரதை, தினமும் முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.