இன்றைய ராசிபலன் - 19.12.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்பு உள்ளது. மலிவு விலையில் ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால் உடனே அதை வாங்காதீங்க. மூன்றாவது மனிதர்களிடம் ஏமாற்றம் அடைவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்ற வேலைகளை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆதாயம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் என்ன செய்தால் முன்னேறலாம், வியாபாரத்தில் என்ன செய்தால் லாபம் சம்பாதிக்கலாம், என்று யோசித்து யோசித்து செயல்படுவீர்கள். உங்களுடைய புத்தி கூர்மை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அத்தனை வழிகளும் உங்கள் கண்ணுக்கு தெரியும். நல்லது நடக்கும்.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு சந்தோஷத்தை கொடுக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகள் இழுபறியாக இருந்தால், அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். இப்படி ஏதோ ஒரு வகையில், உங்கள் கைநிறைய பணம் காசு வரப்போகுது. வேலை தொழில் எல்லாம் எதிர்பார்த்தபடி நல்லபடியாக நடக்கும். கவலை இல்லை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்கூட்டியே முக்கியமான வேலைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும். கடைசி நிமிடம் வரை சோம்பேறித்தனத்தோடு அமரக்கூடாது. சுறுசுறுப்பாக இருந்தால், வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து இன்று தப்பிக்கலாம். முன் கோபத்தை குறைக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். ஆரோக்கியம் சீர்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்யாதீர்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. பிள்ளைகள் முன்பு பொறுமையாக நடந்து கொள்ளவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட தூர பயணம் நன்மையை தரும். பெரியவர்களின் ஆசிர்வாதம் இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எதிர்பாராமல் வரும் பரிசு பொருட்கள் உங்களுக்கு அளவில்லா சந்தோஷத்தை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய வாய்ப்புகள் வரும். நிதிநிலைமை சீராகும். சந்தோஷம் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையும் உண்டு. புதுசாக வண்டி வாகனம் சொத்து வாங்குவதாக இருந்தால், அதற்கான முயற்சிகளையும் இன்று மேற்கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். நோய் நொடி பிரச்சனை விலகும். நீண்ட நாள் உடல் உபாதைகளுக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். வேலை தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நீங்கள் செய்த தவறை நீங்களே திருத்திக் கொள்வீர்கள். செய்த தவறுக்கு உண்டான பிராயச்சத்தை தேடிக்கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு அதிகமாக இருக்கும். கடினமான வேலைகளை கூட ஆர்வத்தோடு செய்து, வெற்றி காண்பீர்கள். உடல் உழைப்பை போட்டு முதலீடு செய்து, வேலை பார்ப்பவர்களுக்கு இன்று பெரிய அளவில் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் கஷ்டப்பட்டும், இந்த வேலையில் என்னால் லாபமே எடுக்க முடியவில்லை என்பவர்களுக்கு கூட கடவுள் இன்று ஒரு நல்ல வழியை காண்பிப்பான்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு தானாக முன்னின்று உதவி செய்வீர்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனநிறைவு அடைவீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பாட்னரை மட்டும் முழுசாக நம்பி எந்த காரியத்திலும் கால் வைக்கக் கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். டென்ஷன் உண்டாகும். அதிகமாக பேசாதீர்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். என்றைக்குமே அடுத்தவர்களின் ஆதரவு நமக்குத் தேவை என்று நினைத்தால் மட்டுமே, இன்று நல்லது நடக்கும். அடுத்தவர்களை உதாசீனப்படுத்தினால், நாமும் உதாசீனம் அடைவோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.