18 வங்கிக் கணக்குகள், அடுக்குமாடி குடியிருப்பு, கார் உட்பட கெஹலியவின் சொத்துக்கள் பறிமுதல்..!!!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தின் வர்த்தமானி விளம்பரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விளம்பரத்தின் பிரகாரம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 18 வங்கிக் கணக்குகளையும் 05 ஆயுள் காப்புறுதிக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதுடன், கொழும்பு 05 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் Mercedes-Benz காரையும் கைப்பற்றியுள்ளது.
வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது.
2024 டிசம்பர் 23 முதல் 2025 ஜனவரி 03 வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த சொத்துக்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.