Tuesday, 17 December 2024

இன்றைய ராசிபலன் - 17.12.2024..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்கள், புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மையே செய்யும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்த நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். பெண்கள் ஆன்மீக வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பணிவு, நல்ல பெயரை வாங்கித் தரும். முன்கோபம் சுத்தமாக இருக்காது. பெருசாக பிரச்சனை வந்தாலும், அதிலிருந்து தப்பிக்க நிதானத்தோடு சிந்திப்பீர்கள். தலைகனம் குறைந்தால் இவ்வளவு நன்மை நடக்குமா, என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அனுபவங்கள் இன்று உங்களுக்கு கிடைக்கும்.



மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். எந்த ஒரு சிக்கலையும் சுலபமாக சரி செய்து விடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். யாரிடத்தில் எப்படி பேசினால் வேலை நடக்கும் என்பதையும், சரியாகப் புரிந்து வைத்துக் கொள்வீர்கள். பெரிய பெரிய தலைவலி பிடித்த ஆசாமிகளை கூட, சுலபமாக உங்கள் வசப்படுத்தி விடுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது நடக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். நீண்ட தூரம் பயணத்தின் மூலம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பயணங்களை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையில் பின்னடைவு உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களை தேவையில்லாமல் மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மேன்மையான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பதட்டத்தோடு கூட பேச மாட்டீர்கள். அமைதி காப்பீர்கள். நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது, உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.



துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சீக்கிரமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக ஏதேனும் தொழில் துவங்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள், புது வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்‌ நாளாக அமையும். புதிய தொழில் துவங்கலாம். தொழில் துவங்க வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்யலாம். அடுத்தவர்களிடம் உதவி கேட்கலாம். நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றால் நல்லது நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தேவையற்ற டென்ஷன் குறையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு வீட்டு உணவை சாப்பிடுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு ஒப்பந்தமும் போடாமல் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ செய்யக்கூடாது. கூடுமானவரை இன்று புது முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களைப் பார்த்து நான்கு பேர் வயிற்று எரிச்சல் படவும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுக்கு நடக்கும் நன்மைகளை, வெள்ளந்தி தனமாக வெளியில் சொல்லாதீர்கள். சில ஒலிவு மறைவுகளை புரிந்து கொண்டு, வாழ்ந்தால் தான் வாழ்வில் வெற்றி காண முடியும்.
SHARE