Sunday, 15 December 2024

இன்றைய ராசிபலன் - 15.12.2024..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கக் கூடிய நாளாக இருக்கும். சிந்தித்து சிந்தித்து செயல்படுவீர்கள். எந்த முடிவையும் அவ்வளவு எளிதில் எடுக்க மாட்டீர்கள். வேலையில்லும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். டென்ஷன் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். எல்லா வேலையிலும் ஆர்வம் காட்ட முடியாது. சில வேலைகளை செய்யாமலேயே அடுத்த நாள் செய்து கொள்ளலாம் என்று ஒத்தி வைத்து விடுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் அதிக அக்கறை தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அச்சம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தில் குறைபாடு உண்டாகும். கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தான் இருப்பீர்கள். விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு வேலை இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். நேரத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த வேலையை செய்வீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உறவினர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மனதிற்கு நிம்மதியும் கிடைக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசி காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு கிடைக்கும். தேவையற்ற உடல் உபாதைகள் நீங்கும். செலவுகள் குறையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாக இருப்பதால் நல்ல ஓய்வு இருக்கும். சுகவாசிகளாக வலம் வருவீர்கள். நண்பர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று நேரத்தை கழிப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். தேவையற்ற பிரஷர் குறையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் சண்டை சச்சரவு வர வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளை முன் கோபப்பட்டு திட்ட வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள், பொறுமை காக்கவும். பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது. வேலை வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வெற்றிவாக சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். விடுமுறை நாள் என்பதால் வேலையில் பெருசாக பிரஷர் இருக்காது. வீட்டில் சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியே கொடுக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வருமானம் பெருகும். வாரா கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். சொத்து சுகம் வாங்குவதற்கு உண்டான யோகமும் இருக்கிறது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்க கூடிய அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசும் உங்கள் திறமை வெற்றி மேல் வெற்றியை கொடுக்கும். பதவி உயர்வையும் கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சில பல சிக்கல்கள் வரும். எதிர்பார்த்த விஷயங்கள் சரியாக நடக்காது. கொஞ்சம் மனது வருத்தப்படும் படியான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். ஆரோக்கியம் இல்லாத உணவை சாப்பிட வேண்டாம்.
SHARE