Saturday, 14 December 2024

இன்றைய ராசிபலன் - 14.12.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற குழப்பம் மனதில் இருக்கும். ஒரு வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது. இதனால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் இறைவழிபாடு செய்வதற்கு அதிக ஆர்வம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளை கைவிடுவதற்கு சில பேர், சூழ்ச்சிகளை செய்வார்கள். இருந்தாலும், உங்களுடைய விடா முயற்சியானது விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். கொஞ்சம் போராடினாலும், இன்றைய நாள் நிறைய அனுபவங்களை கற்றுத் தரும். எதிரிகளுடைய சுய ரூபத்தை தெரிந்து கொள்ளும் நாளாக இன்று இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு வேலை இருந்தாலும் அதையெல்லாம் பம்பரம் போல செய்து முடித்து விடுவீர்கள். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட இருக்காது. ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் சில பேருக்கு அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுறுசுறுப்பாக வேலைகளை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக கையாளுவீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். நிதிநிலைமை ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு புது அனுபவங்களை கொடுக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூட, நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மன குழப்பங்கள் தெளிவு அடையக்கூடிய நாளாக இருக்கும். இன்றைய நாள் சுறுசுறுப்பாக நகர்ந்து செல்லும். சந்தோஷமாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். கடனுக்கு எந்த பொருட்களை பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் செலுத்தவும். வண்டி வாகனம் ஓட்டும் போது காதில் ஹெட்போன் அணிய வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே துவங்க வேண்டும். குறிப்பாக ஏதாவது பஸ் புக்கிங், ட்ரெயின் புக்கிங் இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வீட்டில் இருந்து கிளம்புங்கள். டிராபிக்கில் சிக்கி கடைசி நேரத்தில் டென்ஷன் ஆகிவிடும் ஜாக்கிரதை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று சுகவாசியாக வாழ்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், இன்பமான நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சினையும் கிடையாது. மனைவியிடம் எந்த பொய்யும் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லி தப்பை ஒற்றுக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் சொல்லும் பொய் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாக வந்து நிற்கும் உஷார்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராகும். வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கையை வந்து சேரும். செலவை சமாளிக்க ஒரு தொகை வந்ததில் மன நிறைவு அடைவீர்கள். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுப்பீர்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும்.
SHARE