இன்றைய ராசிபலன் - 09.12.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று விருத்தி அடையக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதைத் தொட்டாலும் அது பல மடங்க லாபத்தை கொடுக்கும். வீட்டில் குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருக்கும், தம்பதியர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய நாள். இன்று நீங்கள் ஒரு புது நகை வாங்கினால், அந்த நகை மேலும் மேலும் சேர தொடங்கும். இன்று உங்களுக்கு அற்புதமான ராசியான நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதார வரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்தால் நஷ்டங்கள் எல்லாம் லாபமாக மாறும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். உங்களால் இயன்ற உதவியை அடுத்தவர்களுக்கு செய்வீர்கள்.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பக்குவமாக பொறுமையாக நடந்து கொள்வீர்கள். சில பல பிரச்சனைகள் வந்தாலும், அதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று, சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களைப் போல வாழ வேண்டும் என்று, உங்களை சுற்றி இருப்பவர்கள் நினைப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவி சண்டை சரியாக ஒற்றுமை நிலவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகள் சரியான நேரத்தில் நடக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். நிதிநிலைமை சீராகும். குழந்தைகளால் மனது சந்தோஷம் அடையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். ஓய்வு எடுக்க வேண்டும் போல தோன்றும். வார துவக்க நாள் என்பதால் சிலருக்கு வேலை சுமையும் அதிகமாக இருக்கும். டென்ஷன் இருக்கும். எல்லாவற்றையும் சரிவர பேலன்ஸ் செய்ய வேண்டும் என்றால், காலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலையை துவங்கி விட வேண்டும். இன்றைய நாள் கொஞ்சம் அசௌகரியம் நிறைந்த நாளாக தான் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகம் ஒரு துளி கூட குறையாது. சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில பேருக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாடு பெரிய அளவில் மன நிம்மதியை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும், ஏற்றமும் இறக்கமும் சேர்ந்த நாளாக தான் இருக்கும். காலையில் கொஞ்சம் சோம்பலோடு, கொஞ்சம் சண்டையோடு துவங்கும் நாள். முடியும் போது ரொம்பவும் உற்சாகமாக சந்தோஷமாக முடியும். ஆகவே காலை நேரத்தை கடக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதி இருக்கும். முக்கியமான வேலையை செய்ய மறப்பீர்கள். மேலதிகாரிகளுடன் திட்டு வாங்குவீர்கள், அல்லது வீட்டில் வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் வரும். முக்கியமான வேலைகளை குறித்து வைத்துக் கொண்டு, சரியாக செய்வது இன்று உங்களுடைய கடமை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க கூடிய சூழ்நிலையை நீங்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த, வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகளுடைய எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கை என்றால் என்ன, பணம் எந்த அளவுக்கு முக்கியத்துவமானது என்பதையும் புரிந்து கொள்ளக்கூடிய அனுபவங்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் தானாக விளக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு, முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை வேலைகளையும் அக்கறையோடு பார்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கொஞ்சம் முன்கோபத்தை குறைத்தால் வாழ்வில் சீக்கிரம் வெற்றி காணலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை இன்று செய்யலாம். வெற்றி கிடைக்கும். சில பேருக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாடு மன நிறைவை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். நேரத்தை வீணாக செலவழித்தால் எவ்வளவு பிரச்சனை வரும் என்று, நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற கெட்ட பழக்கத்திலிருந்து தானாக விடுபடுவீர்கள். புதிய அனுபவங்கள் கிடைக்கும் நாளாக இன்று இருக்கும்.