Saturday, 14 December 2024

07 விருதுகளை தட்டி சென்ற நல்லூர் பிரதேச செயலகம்..!!!

SHARE

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட "வெளிச்சத்தின் விளக்கு" குறுநாடகம் சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடத்தினை பிடித்துள்ளது.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு-2024 அவ்வமைச்சின் அமைச்சர் பேராசிரியர் ஹனிதம சுனில் செலெவி தலைமையில் நேற்றைய தினம்(13) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட "வெளிச்சத்தின் விளக்கு" குறுநாடகம் சிறந்த நாடகப்பிரதியில் முதலாம் இடம் பெற்றது.

அத்துடன், சிறந்த நாடக நெறியாள்கையிலும் முதலிடத்தையும் , சிறந்த நடிகருக்கான விருது சிறந்த நடிகைக்கான விருது,சிறந்த இசையமைப்புக்கான விருது என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் சிறந்த குறு நாடகம் என்ற விருதினையும் பெற்றதோடு சிறந்த குறுநாடகத்தினை அளிக்கை செய்த திணைக்களம் என்ற பாராட்டுச்சிறப்பு விருதையும் பிரதேச செயலாளருக்காக கையளிக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச செயலகம் நேற்றைய நிகழ்வில் மொத்தமாக ஏழு விருதுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


SHARE