உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு..!!!
சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 29, 30 மற்றும் 1ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.