Monday, 11 November 2024

பொதுத் தேர்தலில் இம்முறை ஆள்காட்டி விரலுக்கே மை..!!!

SHARE

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை விளக்கினார்.

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கை மோதிர விரலுக்கு மை பூசினோம். பலருக்கும் இப்படித்தான் குறி வைத்துள்ளனர். அதனால், இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறி வைக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.”

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும்.

10வது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3 நாட்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

SHARE