நெடுந்தீவு படகு சேவைகள் இடைநிறுத்தம்..!!!
குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் மறுஅறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது
வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாகவே படகு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டத்தில், இடர்நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர்.
அத்துடன் குறிகாட்டுவான் இறங்குதறையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார். அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.