Friday, 8 November 2024

பாடசாலைகளுக்கு விடுமுறை..!!!

SHARE


எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி, பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காக அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்துப் பாடசாலைகளும் 13ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
SHARE