யாழில் வைத்தியர் வீட்டில் கொள்ளையிட்டு போதைப்பொருள் வாங்கிய இளைஞர்கள்..!!!
யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை உடைத்து பணத்தினை கொள்ளையடித்து, போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தட்டாதெரு சந்தி பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் இருக்கை பகுதியை உடைத்து , அதனுள் இருந்த ஒரு தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வீட்டின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பணத்தினை கொள்ளையடித்து சென்ற சந்தேக நபர்களின் ஒளிப்படங்கள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.
சந்தேகநபர்கள் அரசடி பகுதியில் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்க்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
இதன்போது இருவரிடம் இருந்தும் 10 போதை மாத்திரைகளும் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானர்வர்கள் எனவும் , போதை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திருட்டு , கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.