தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலன் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய போதே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தாரா?
நாம் வந்தோம். தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27000 வாக்குகள் கிடைத்து. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது. ஆனாலும் அது எமக்கு மிகப்பெரியது.எமது செய்தி தமிழ் மக்களிடம் செல்லவில்லை. தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் உள்ள கட்சிகளின் தயவுடன் ஏனைய கட்சிகள் வடக்குக்கு வந்தது. அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையே ஒன்றிணைத்தார்கள்.மக்களை ஒன்றிணைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியில் நாங்கள் வடக்கில் தலைவர்களுடன் பேசியதுடன் மக்களுடன் இணைந்து அரசியல் செய்கிறோம். தெற்கிற்கு எதிராக வடக்கிலும் வடக்கிற்கு எதிராக தெற்கிலும் செயற்பட்டு எவ்வாறு ஒற்றுமையை காட்டுவது. நாம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் ஒன்றிணைய தயார் என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது.
தேர்தலுக்கு பின்னர் திசைகாட்டி அரசாங்கத்தில் இணைவேன். அமைச்சு பதவி எடுப்பேன் என சிலர் சொல்கின்றனர். அவர்கள் ஆசனங்கள் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் மக்கள் எம்முடன் உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் முன்பாக பல கட்சிகள் எம்முடன் இணைய தயங்கினர். அவர்களுக்கு நாம் இப்போது சொல்வது பழைய கட்சிகள் பஸ்ஸை தவற விட்டுவிட்டனர். யாழில் புதிய அரசியல் தலைவர்கள் எழும்புகின்றனர். புதிய இளம் சக்திகள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோருங்கள். பஸ்ஸை தவறவிட்டவர்களுக்கு பஸ்ஸில் இடமில்லை. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
இந்த நாட்டில் 30 வருடங்கள் தொடர்ச்சியான யுத்தம் நிகழ்ந்தது. எமது பரம்பரை யுத்தத்தில் ஈடுபட்டது. சிங்கள தமிழ் முஸ்லிம் இடையே உள்ள சந்தேகம் கோபத்தை முற்றாக ஒழித்து தேசிய மக்கள் சக்தியாக முன்னேறுவோம்.
எமது ஆட்சியில் சில சந்தேகங்கள் இருக்கலாம். படிப்படியாக அந்த சந்தேகங்கள் நீங்கும். உங்கள் பிரச்சினைகள் தீரும். எல்லோரும் தமது மொழியில் கதைத்து தமது கலாசாரத்தை பின்பற்றும் நிலையை உருவாக்குவோம்.
தற்போதும் மூடியிருந்த பாதையை திறந்து வைத்தோம். அதுக்கு திறப்பு விழா வைத்தோமா? திறப்பதற்கு வைபவங்கள் தேவையா? அது மக்களின் உரிமை. வேறு யாரும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் மூடியவரே விழா வைத்து திறந்திருப்பார்.
படிப்படியாக உங்கள் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் சிலர் இருக்கிறார்கள். அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரமாக வாழ அனைவருக்கும் உரிமை உண்டு.அப்படி ஒரு நாடு தேவை இல்லையா?
2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் வந்தேன். சரியான வறுமையில் மக்கள் வாடினார். மக்கள் ஆயிரம் வருடங்களுக்கு வாழ்வதில்லை. 70, 80 வருடங்கள் வாழ சிறந்த வசதிகள் வேண்டும். வறுமையில் அடிமட்டத்தில் இருந்த மக்களை அதிலிருந்து நாம் மீட்க விடியாவிட்டால் எந்த அரசாங்கத்தால் அதனை செய்ய முடியும்.
விவசாயம் செய்யுங்கள். நியாயமான விலை கொடுக்க நாம் நடவடிக்கை எடுக்கப்படும். 15000 இலிருந்து 20000 உர மானியம் வழங்கப்படும். உங்களுக்கு சொந்தமான கடல் வளம் முற்றிலும் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். எமது கடலில் எமது மக்கள் மீன் பிடிப்பதை நாம் உறுதி செய்வோம். யாரும் அழிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்
சுற்றுலாவுக்கான சிறந்த கடற்கரை உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடி வடக்கில் சுற்றுலா துறையை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் வடக்கில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பர்.
பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்.சீன அரசாங்கத்தினால் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.அடுத்த வருடம் பாடசாலை தவணை ஆரம்பிக்கும்போது பாடசாலை உபகரணங்கள் புத்தகங்கள் வாங்க உதவி வழங்கப்படும்.
யுத்தத்தின் பின்னர் படிப்படியாக வடக்கில் போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி என்றனர். கேரள கஞ்சா போதைப்பொருள் வடக்கில் மிக வேகமாக பரவுகிறது. போதைப் பொருளில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டெடுப்போம். இந்த போதைப்பொருளுக்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். இதனை நிறுத்தி மாற்ற வேண்டும். அது சவால். வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம்.
இரசாயன பொருட்களை உற்பத்தி செய்ய பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிப்போம்.சீமெந்து தொழிற்சாலை, வாழைச்சேனை தொழிற்சாலை ஆகிய புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை வளர்க்க எம்மால் நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜிட்டல் இலங்கையை அமைப்போம். மின் கட்டணம், நீர் கட்டணம் ,அஸ்வெசும கொடுப்பனவு, பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறல், உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்குவோம். மூன்று நான்கு வருடங்களுக்குள் செய்வோம்.
நாம் மக்களுடைய பணத்தை களவெடுப்பதா? வீணடிப்பதா? அது தான் பழைய அரசியல். அவர்கள் இன்னும் அதனை கைவிடாமல் உள்ளனர்.
தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி, அதிக பாதுகாப்பு அதிக செலவு கேட்கின்றார்.ஜனாதிபதி செயலகத்தில் 800ற்கு மேற்பட்ட வாகனங்கள் காணப்பட்டது.யாழ்ப்பாணம் டிப்போவில் இத்தனை வாகனங்கள் இல்லை. வைத்தியசாலையில் அம்புலன்ஸ் இலலை. ஆனால் ஜனாதிபதி வீட்டில் எந்நேரமும் ஆம்புலன்ஸ் இருக்கும். ஜனாதிபதி தனக்கு ஏற்றவாறு செலவு செய்ய முடியாது நிலைமையை ஏற்படுத்துவோம்.
யாழ்ப்பாணத்தில் மண் கொண்டுபோக பணம் கொடுக்க வேண்டும். மக்கள் பணத்தை களவெடுக்காதா புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்போம்.
அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்துவோம். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம். அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம். அவ்வாறான அரசியல் தலைவர்களை நாம் உருவாக்குவோம்.
நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு தேவை இல்லையா? தேவை தானே! பழைய அரசியலை கைவிடுவோம். புதிய அரசியலுக்கு வருவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் பேதமின்றி பிரியாது சண்டை பிடிக்காது வாழ்வோம். அது தோல்வியடைந்த பழைய அரசியல். நவம்பர் 14 ம் திகதி நாம் பங்களித்து சக்தி வாய்ந்தத அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம்.
செப்டம்பர் 21ம் திகதி இடம்பெற்ற மாற்றம் விசித்திரமானது. சேனநாயக்கா,பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தன மற்றும் விக்ரமசிங்க, பிரேமதாசா, ராஜபக்ஷ ஆகிய ஐந்து குடும்பங்களின் கையில் நாடுகளின் ஆட்சி மாறியது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யார் எனக்கு எதிராக போட்டியிட்டார்கள். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே போட்டியிட்டார்கள்.குடும்பங்களின் கையில் இருந்த பிரபுத்துவ ஆட்சி சாதாரண குடும்பத்தின் கையில் மாறியது புரட்சி இல்லையா! இது பொது மக்களின் வெற்றி. அந்த பிரபுத்துவ குடும்பத்தினர் கஸ்ரப்படுகின்றனர். பொறுத்துக்கொள்ளாது ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்கின்றனர்.
நான் இந்த யாழ்ப்பாணத்தில் இருந்து கூறுகிறேன். முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் பகிரங்க சவால் விடுக்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலி எடுத்த வாக்குகளின் அரைவாசியை எடுத்து காட்டுங்கள். என்னை கவிழ்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களை மக்கள் கவிழ்ப்பார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. வாக்குகள் இம்முறை கூடும்.யாழ் மக்கள் திசைகாட்டி ஆட்களை அனுப்புங்கள். பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும். பாராளுமன்றுக்குள் கத்தி மிளகாய் தூள் கொண்டுவந்து சண்டை பிடிக்கின்றனர். பாடசாலை மாணவர்களை பாராளுமன்ற கலரியில் இருந்து அகற்றுமாறு சபாநாயகர் அடிக்கடி கூறுவார்.
பாராளுமன்றை பார்க்க பாடசாலை மாணவர்களுக்கு தடை. மிருகக்காட்சி சாலைக்கு தடை இல்லை. இது தேர்தல் அல்ல பாராளுமன்றை சுத்தப்படுத்தும் சிரமதானம்.
பார் பெமிட் கொடுத்தாக கூறப்படுகிறது. அவ்வாறானவர்கள் இல்லாது பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம். ஊழல் மோசடி இல்லாமல் பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம்.
இந்தியா கடந்த காலத்தில் பல திட்டங்களுக்கு கடன் தந்தார்கள். அதில் சில நன்கொடையாக்கி உள்ளார்கள். நாம் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துகிறோம்.நாட்டை விட்டு பலர் வெளியேறினர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பலரும் வெளிநாட்டில் வியாபாரிகளாக கல்விமான்களாக ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.
யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப நீங்கள் யோசிப்பீர்கள் தானே? உங்கள் அறிவை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள். உங்கள் நிதியை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வாருங்கள். இந்த நேரத்தில் கொண்டு வராத நிதி மற்றும் அறிவால் பலனில்லை . எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் ஒரே எதிர்பார்ப்பு இருக்கிறது. அது இந்த நாட்டை கட்டியெழுப்புவது தான் – என்றார்.