Saturday, 2 November 2024

யாழில் ரயில் விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி  குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார்.

சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் செவிப்புலனற்றவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
SHARE