Thursday, 7 November 2024

யாழில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு..!!!

SHARE


குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது - 35) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் தனது வாகனத்தில் நித்திரையில் இருந்தபோது குளவி கொட்டியுள்ளது. வலி தாங்கமுடியாமல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல்கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
SHARE