இதுவரை யாழில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் வென்றதாக வரலாறு இல்லை - அங்கஜன்..!!!
இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் வென்றதாக வரலாறு இல்லை என ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, சுயேட்சை குழுக்களின் அதிகரிப்பு பிரதான அரசியல் தரப்புக்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை தேர்தலில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சை குழுக்களுமாக 396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சரியானவர்களை தங்களுக்கு வேலை செய்தவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பர்.
மக்கள் சரியானவர்களை தீர்மானிப்பார்கள். நீங்கள் மக்களை அந்த அளவுக்கு அறிவில்லாதவர்களாக யோசிக்க கூடாது. வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்டு சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தெரியும் மக்கள் அறிவில்லாதவர்கள் அல்ல. மக்கள் சிந்தித்து வாக்களிப்பர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பலர் போட்டியிட்டனர். ஆனால் யாழ் மாவட்டத்தில் பிரதான தரப்புக்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கே மக்கள் அதிகளவில் வாக்களித்தார்கள்.
மக்களோடு இருந்து மக்களுக்காக வேலை செய்வார்களுக்கு சுயேட்சை குழுவால் எந்த பாதிப்பும் இல்லை ஏனையவர்களுக்கு அது பாதிப்பு.- என்றார்.