வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டம்..!!!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினமான இன்றைய தினம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம் , கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடியதுடன், வீடு அமைந்திருந்த காணிக்குள் மர நடுகைகளும் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் போது அங்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், புகைப்படத்தினை நீக்கிவிட்டு பிறந்தநான் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துங்கள் என அறிவுறுத்தினார்கள்.
அதன் பிரகாரம் பதாகையில் இருந்த புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை மறைத்து விட்டு பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினார்கள்.
அதேவேளை , புலிகளின் தலைவரின் பூர்விக வீடு இடித்து அழிக்கப்பட்டு , தற்போதும் வெறும் காணியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.