சுவிஸ்சர்லாந்து கார் விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்..!!!
சுவிஸ்சர்லாந்து வலே மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
வலே மாநிலத்தில் அதிகாலை 4:30 மணியளவில் பார ஊர்தியுடன் அதிவேகமாக கார் மோதிய விபத்தில் இச் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கேசவன் வயது 27 என்ற இளைஞரே உயிரிழந்தவர்.
படுகாயமடைந்தமூவர் வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது சுமார் ஒரு மணியத்தியாலத்திற்கு மேலாக இவ் வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்