Saturday, 9 November 2024

தமிழ் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு வினைத்திறனுள்ள செயல்வீரர்களே அவசியம் - அங்கஜன் இராமநாதன்..!!!

SHARE

தமிழ் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு வினைத்திறனுள்ள செயல்வீரர்களே அவசியம்.

இன்று பருத்தித்துறை தொகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இவ்வாறு கருத்துரைத்தார்.

தொடர்ந்து,
நாங்கள் கடந்த காலங்களில் உங்களோடும் உங்கள் கிராமங்களிலும் நிறைய வேலைத்திட்டங்களை செய்தவர்கள். 100 வீதம் உங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும் நாட்டின் நெருக்கடிகளுக்குள் 50 வீதமாகவேனும் நிறைவேற்றியுள்ளேன். அதுவும் தனியொருவனாக - ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டே இருந்தபோது நான் உங்களுக்காக வேலைகளை செய்திருந்தேன்.

இப்போது எங்கள் இருப்புக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் இந்த மண்ணை நாம் விருத்தி செய்ய வேண்டியதும், எங்கள் அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டியதும் அவசியப்படுகிறது. ஆகவே ஏற்கனவே உங்களோடு நின்று வேலை செய்த ஆளணியான எமது தரப்பிலிருந்து உங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது இன்னும் அதிகமான வேலைத்திட்டங்கள் எங்கள் மண்ணில் நடைபெறும் என்ற உத்தரவாதத்தை தருகிறேன்.

வெறுமனே பேசிக்கொண்டே காலத்தை கடத்தியவர்களை வெளியேற்றி, வேலை செய்தவர்களையும், வேலை செய்யக்கூடிய புதியவர்களையும் தெரிவு செய்வதே இந்த தேர்தலில் எங்கள் மக்களின் பொறுப்பாக இருக்கிறது. என்றார்.
SHARE