Tuesday, 19 November 2024

முதலாவது நாடாளுமன்ற அமர்வை எளிமையான முறையில் நடத்த நடவடிக்கை..!!!

SHARE


பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை மறுமதினம் முற்பகல் 10 மணிக்கு முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து, முற்பகல் 11.30க்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

இதன்படி ஜனாதிபதி அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைப்பார்.

இந்தநிலையில், 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
SHARE