File image |
புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (28) மீளப்பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று, நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பில் முன்னிலையாகத் தவறியமைக்காக அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அர்ச்சுனாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தமையினால் ல் நீதிமன்றத் திகதியை மறந்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவித்தார் இந்தக் கருத்தினை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற்றுள்ளாா்.